ராசிபுரத்தில் ரூ.3¼ கோடியில் மாணவியர் விடுதி கட்ட பூமிபூஜை-அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
ராசிபுரத்தில் ரூ.3¼ கோடியில் மாணவியர் விடுதி கட்ட பூமிபூஜை நடந்தது.
ராசிபுரம்:
ராசிபுரத்தில் ரூ.3 கோடியே 22 லட்சம் மதிப்பில் அரசு ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார். மேலும் அவர் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மல்லிகா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மோகன சுந்தரம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.