கோபி அருகே மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் சாவு; கம்பத்தின் அருகே விளையாடிய போது விபரீதம்
கோபி அருகே மின்கம்பத்தின் அருகே விளையாடியபோது, மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
கொடுமுடி அருகே ரெயிலில் அடிபட்டு அரசு பள்ளிக்கூட ஆசிரியர் பலியானார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவர், நாமக்கல் மாவட்டம் கொமாரபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவருடைய மகன் கார்த்திக் (வயது 30) என்பதும், இவர் கடந்த 6 மாதங்களாக ஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பொருளியியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக்கின் உறவினர்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இந்தநிலையில், கார்த்திக்கின் உடலை வாங்குவதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று திரண்டனர். பின்னர் அவர்கள் கார்த்திக்கின் உடலை வாங்க மறுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, 'கார்த்திக்கின் 2 கை மணிக்கட்டும் அறுக்கப்பட்டு ரத்தக்காயம் உள்ளது. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துவிட்டு ரெயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. எனவே அவருடைய சாவில் மர்மம் உள்ளதால் உரிய விசாரணை நடத்தி, கார்த்திக்கின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
பரபரப்பு
இதைத்தொடர்ந்து போலீசார், 'இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்' என்று கூறினர். அதன்பேரில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியல் காரணமாக ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.