10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு சாவு

புளியங்குடி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு இறந்தார். அவரை தற்ெகாலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-06 19:49 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு இறந்தார். அவரை தற்ெகாலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

10-ம் வகுப்பு மாணவி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சுப்பிர மணியபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த மருதையா மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களது மகள் மல்லிகா (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக மருதையா, மனைவி மற்றும் மகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் கிருஷ்ணம்மாள் மீதும் போலீசில் வழக்கு இருந்ததால் மல்லிகா, தனது அத்தை உறவுமுறையான சுமதி என்பவரது வீட்டில் வசித்து வந்தார்

தூக்குப்போட்டு சாவு

கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகாவை, சுமதி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மல்லிகா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவி மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் மீது வழக்கு

மேலும் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தாய் கிருஷ்ணம்மாள், சுமதி மற்றும் உறவினர் முனியாண்டி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்