10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு

10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

Update: 2022-06-15 22:29 GMT

கோப்புப்படம்

சென்னை,

2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1-ந் தேதி தொடங்கி 9-ந் தேதியுடன் நிறைவுபெற்றது.

திருத்திய மதிப்பெண்களை பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கல்வித்துறை திட்டமிட்டபடியே தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருப்பதாகவும், தேர்வு முடிவுகள் வெளியான ஓரிரு நாட்களிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் வாயிலாக பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்