கஞ்சா பீடி கேட்டு கைதிகளுக்கு இடையே மோதல் - மதுரை மத்திய சிறையில் பரபரப்பு
மதுரை மத்திய சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் 1200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் மூவர் கொலை வழக்கில் ஆயிள்தண்டனை அனுபவித்து வரும் கனித்குமார் உள்ளார். இதே சிமதுரை மத்திய சிறையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
ழக்கில் 10 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி வெள்ளைகாளியின் கூட்டாளி.
இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் கஞ்சா பீடி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி வெள்ளைக்காளி தரப்பிற்கும், கனித்குமார் தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைதிகள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.