பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-22 22:30 GMT

பொள்ளாச்சி

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் முயற்சி

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று தெரிகிறது. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று பல்லடம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

உரிய நடவடிக்கை

அப்போது பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்