தேவகோட்டையில் சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு

தேவகோட்டையில் சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2023-09-19 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை நகராட்சியில் 2023-24-ம் ஆண்டிற்கு 37 சாலைகள் ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தேவகோட்டை நகர் முழுவதும் நடைபெற்று வரும் இந்த பணிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் நேரடியாக ஆய்வு செய்தார். பணி நடைபெற்று வரும் சாலைகளில் தரமாக போடப்படுகிறதா? என்றும் சோதனை செய்தார். ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் மீரான்அலி உடன் இருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்