சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சத்யாகிரக போராட்டம்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் சத்யாகிரக போராட்டம்;

Update: 2023-05-09 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க நாகர்கோவில் மண்டலம் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று சத்யாகிரக போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. சங்க தலைவர் சங்கரநாராயண பிள்ளை தலைமை தாங்கினார். போராட்டத்தை பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் இந்திரா, மாவட்ட செயலாளர் தங்க மோகனன், செயல் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், தாமஸ், ஸ்டீபன் ஜெயக்குமார், லியோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்