கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-30 16:33 GMT

ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு அனைத்து பணப்பலன்களும், ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். 79 மாத டி.ஏ. நிலுவையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர்  கடலூர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர்கள் ஜான்விக்டர், முத்துகுமரன், தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கிடையே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் திடீரென போக்குவரத்து கழக பணிமனை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் பொது செயலாளர் முருகன், துணை செயலாளர் பழனிவேலு, மாநிலக்குழு கலியமூர்த்தி, துணை தலைவர்கள் செல்வராஜ், பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்