தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.யினர் செவ்வாய்க்கிழமை ஆர்பபாட்டம் நடத்தினர்.;

Update: 2022-09-13 11:35 GMT

தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.யினர் செவ்வாய்க்கிழமை காலையில் ஆர்பபாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பீச் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசிங்கம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், தமிழ்நாடு மின்சார தொழலாளர் சம்மேளன மாநில இணை செயலாளர் முத்துக்குமார், டாஸ்மாக் மாநில உதவி தலைவர் நெப்போலியன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சேது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் திருத்திய தொழிலாளர்நலச்சட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது. அனைத்து துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஒராண்டுக்குள் 240 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இ.பி.எப் திட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். மின்சார கட்டணம், வீட்டுவரி, சொத்துவரி மற்றும் தண்ணீருக்கும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்கும் சட்டதிருத்தத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொருளாளர் சுப்பையா, மாவட்ட நிர்வாகிகள் கோட்டை நடராஜன், சங்கரவேல் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்