சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில்மே தின ஊர்வலம்-பொதுக்கூட்டம்

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில், மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் தேனியில் நடந்தது.;

Update: 2023-05-01 18:45 GMT

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில், மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் தேனியில் நடந்தது. பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலை சந்திப்பில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின் போது மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டே ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் கம்பம் சாலை, நேரு சிலை சிக்னல், மதுரை சாலை வழியாக பங்களாமேட்டில் நிறைவடைந்தது.

பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. அதற்கு, சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சண்முகம், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் செண்பகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்