குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

வளையாம்பட்டு கிராமத்தில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-04 13:10 GMT

செங்கம்

செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையாம்பட்டு கிராமத்தில் கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட தெருக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியில் உள்ள பெண்கள் காலி குடங்களுடன் செங்கம்-வலசை சாலையில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த பஸ்சையும் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கம் போலீசார் விரைந்து சென்று குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்