புனித அன்னாள் ஆலய தேர்பவனி

பேராவூரணி அருகே ஆதனூர் புனித அன்னாள் ஆலய தேர்பவனி நடந்தது;

Update: 2022-07-26 20:36 GMT

பேராவூரணி;

தஞ்சை மறை மாவட்டம் ஆதனூர் பங்கு புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருவிழா தேர் பவனி நடைபெற்றது. ஏசு கிறிஸ்துவின் தாய் மரியன்னையை ஈன்றெடுத்த புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் நவநாள் ஜெபம், திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனியையொட்டி கூட்டு திருப்பலி நடைபெற்றது. கூட்டு திருப்பலியை பட்டுக்கோட்டை மறை மாவட்ட அதிபர் அந்தோணிசாமி ஆதனூர் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி துரை, தஞ்சாவூர் மகர் நோன்பு சாவடி உதவி பங்கு தந்தை தமஸ்கு ஆகியோர் நிறைவேற்றினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இரவு 10.30 மணியளவில் கொட்டும் மழையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து ஆலயத்தை அடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்