கிறிஸ்துமஸ் விழா

பாளையங்கோட்டையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2022-12-19 21:25 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மிஷன் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் தலைமை தாங்கினார். மிலிட்டரி லைன் சேகரகுரு பிரடெரிக் சத்தியசாமுவேல் ஜெபம் செய்தார். மருத்துவமனை மேலாளர் மெல்டன் தங்க ஜெபக்குமார் வரவேற்றார். கலை நிகழ்ச்சிகளை டாக்டர் கிருபா, வனஜா, பிரீடா தொகுத்து வழங்கினார்கள். விழாவில் திருமண்டல பொருளாளர் ஏ.டி.ஜே.சி.மனோகர், புக் டெப்போ கண்காணிப்பாளர் நொபிலி, ரூபி ராஜாசிங் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் வாழ்த்துரை வழங்கி, கிறிஸ்துமஸ் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். டாக்டர் அஸ்வின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் மெல்டன் தங்கஜெபக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பால் ராபின்சன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்