கள்ளக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறையொட்டி கள்ளக்குறிச்சியில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-02 18:45 GMT

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு கடைசி முறையாக ஜெருசலேம் நகருக்கு சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு இருந்த மக்கள் அவரை, ஒலிவமரக் கிளைகளை கைகளில் பிடித்த படி 'தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா' என்று ஆர்ப்பரித்து வரவேற்றதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறை கடைபிடிக்கின்றனர். அதன்படி குருத்தோலை ஞாயிறு கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பாடல்களை பாடிய படி பவனியாக ஆலயத்தை வந்தடைந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்