சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

Update: 2022-12-06 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை அடுத்து சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி ஆகிய சன்னதிகள் எதிரே உள்ள கீழ ரதவீதிகளில் அமைந்துள்ள கோவில் நிர்வாகம் சார்பில் பனைமரம், பனை ஓலை, கம்புகளான சொக்கப்பனை அமைக்கப்பட்டது. இதனை அடுத்து கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்தின் அருகே எழுந்தருளினார்: இதனையடுத்து இரவு 7.45 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர் பவுல் ஜேசுதாஸ் மற்றும் போலீசார் செய்திருந்தனர். முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்திருந்தனர்.

புளியங்குடி

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் பவானி அம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், பால நாகம்மன், நாகக்கன்னி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாலை 6 மணி அளவில் கோவில் முழுவதும் கார்த்திகை தீபத்திருநாள் 1008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இதேபோல் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்வு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்