மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
கோபால கட்டளை மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கோபாலகட்டளையில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அர்ச்சனைகள், மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.