முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழா கொடியேற்றம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்றான வள்ளியூர் முருகன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
28-ந்தேதி, தேரோட்டம்
9-ம் திருநாளான வருகிற 28-ந்தேதி (வெள்ளிகிழமை) காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாளான 29-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரவில் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு வந்து காட்சியளிக்கின்றார்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கர் அசோக்குமார், ஆய்வாளர் கோபாலன், கூடுதல் பொறுப்பு செயல் அலுவலர் ராதா மற்றும் கட்டளைதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.