விவசாயிகளுக்கு சிப்ஸ் தயாரிப்பு பயிற்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சிப்ஸ் தயாரிப்பு பயிற்சி நடந்தது.;
பந்தலூர்,
கூடலூர் தோட்டக்கலைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாங்கோடு, அம்பலமூலா பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வீட்டின் மாடியில் தோட்டங்கள் அமைத்தல், வாழைகளில் மதிப்பு கூட்டி சிப்ஸ் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் விஜயலட்சுமி திட்டங்கள் குறித்து விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் யமுனப்பிரியா வரவேற்றார். முகாமில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும், வாழையில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் விளைப்பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு உழவர் சந்தையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். இதில் தோட்டக்கலை அலுவலர் கவுசல்யா, வேளாண் பயிற்றுனர் ஆரோக்கியசாமி, வணிகத்துறை வேளாண் அலுவலர் லட்சுமணன் உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.