சின்னவாய்க்கால் பாசன பகுதியில் வடிகால் கண்ணாறுகள் கட்டும் பணி தீவிரம்

சின்னவாய்க்கால் பாசன பகுதியில் வடிகால் கண்ணாறுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;

Update:2023-03-24 00:15 IST

கம்பம் பள்ளதாக்கு முல்லைப்பெரியாறு பாசனத்தில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து கம்பம் ஏழரசு கோவில் வரை 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு சின்னவாய்க்கால் உள்ளது. இதன்மூலம் சுமார் 1,400 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாற்றில் இருந்து மதகு அமைக்கப்பட்டு இந்த வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வடிகால் கண்ணாறுகள் அமைக்கப்பட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தன.

இந்நிலையில் வடிகால் கண்ணாறுகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இதனால் கண்ணாறுகளில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே உள்ள வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து வடிகால் கண்ணாறுகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த ஆண்டும் நீர்வள நிலத்திட்டத்தின் கீழ் கம்பம் சின்னவாய்க்கால் பகுதியான குள்ளப்பகவுண்டன்பட்டி பிரிவில் இருந்து சாமாண்டியம்மன் கோவில் வரை உள்ள 13 வடிகால் கண்ணாறுகள் தலா 36 மீட்டர் அளவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சின்னவாய்க்கால் பகுதியில் 2-ம் போக சாகுபடி அறுவடை பணிகள் முடிந்து வயல்கள் தரிசாக உள்ளது. இந்நிலையில் தற்போது வடிகால் கண்ணாறுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்