சின்னசேலம் தாசில்தார் பொறுப்பேற்பு

சின்னசேலம் தாசில்தார் பொறுப்பேற்பு;

Update: 2022-09-05 16:32 GMT

சின்னசேலம்

சின்னசேலம் தாசில்தாராக பணியாற்றி வந்த அனந்தசயனன் சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து கல்வராயன்மலை தனிதாசில்தார் இந்திரா சின்னசேலம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இவர் தாலுகா அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா, மண்டல துணை தாசில்தார் மனோஜ் முனியன், தேர்தல் தனி தாசில்தார் குணசேகரன், நில அளவை வரைவாளர் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்