சின்னப்பனையூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சின்னப்பனையூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2023-04-10 19:04 GMT

மாரியம்மன் கோவில்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் தெற்கு கிராமம், சின்னப்பனையூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி புதிதாக கோவில் கட்டப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் ஊர்மக்கள் பெருகமணிக்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

கும்பாபிஷேகம்

இதைத்தொடர்ந்து ேகாவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை, 2-ம் கால யாகசாலை பூஜை, 3-ம் கால யாகசாலை, 4-ம் கால யாகசாலை பூஜை மற்றும் கடம் புறப்பாடு நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக ேகாவிலை சுற்றி எடுத்து வந்தனர். பின்னர் காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார் வெங்கடேஷ் தலைமையில் மாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டு சுற்றியது. இதைப்பார்த்த பக்தர்கள் ''ஒம் சக்தி பராசக்தி" என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சின்னப்பனையூர், களத்துப்பட்டி, வீராச்சிப்பட்டி, ராமாயி பனையூர் பொதுமக்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்