பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் கைது

புகாரின் அடிப்படையில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;

Update:2024-02-17 07:14 IST

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை மயிலாப்பூரில் மதன்லால் என்பவர் ஐஸ்கிரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் வந்திருந்தார். அப்போது அந்த மாணவியிடம் மதன்லால் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, வீட்டுக்கு சென்று இதுபற்றி தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாணவியின் சகோதரி பெப்பர் ஸ்பிரேவுடன் ஐஸ்கிரீம் கடைக்கு வந்தார். உடன் அந்த மாணவியும் வந்திருந்தார்.

மீண்டும் மாணவியிடம் மதன்லால் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது மதன்லால் முகத்தில் மாணவியின் சகோதரி பெப்பர் ஸ்பிரேவை அடித்தார். மேலும் மதன்லால் மீது மயிலாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்