போலிஇயற்கை உரத்தால் பட்டுப்போன மிளகாய் செடிகள்

போலிஇயற்கை உரத்தால் பட்டுப்போன மிளகாய் செடிகள்

Update: 2023-09-24 10:48 GMT

பொங்கலூர்

பொங்கலூர் அருகே உள்ள கண்டியன்கோவில் ஊராட்சி தாயம்பாளையம் மாலைக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஒரு ஏக்கர் அளவிற்கு மிளகாய் சாகுபடி செய்திருந்தார். அது நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாரானது. இந்த நிலையில் மிளகாய் செடிகளுக்கு இயற்கையான முறையில் உரம் இடுவதற்காக திருப்பூர் உஷா தியேட்டர் அருகே உள்ள ஒரு இயற்கை உர விற்பனை கடையில் உரம் வாங்கி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கடைக்காரர்கள் நேரடியாக வந்து இயற்கை உரத்தை ரசாயன உரத்துடன் கலந்து செடிகளுக்கு வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

உரம் வைக்கப்பட்ட பின் நீர் பாய்ச்சி சுமார் 4 நாட்கள் ஆனதும் செடிகள் கருகத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காளிமுத்து இதுகுறித்து சம்பந்தபட்ட கடைக்காரர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். அறுவடைக்கு தயாரான நிலையில் மிளகாய் செடிகள் காய்ந்து போனதால் அவருக்கு ரூ.50 ஆயிரம் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இதுபோன்று போலியான இயற்கை உரங்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்