ரூ28½ லட்சத்தில் சிறுவர் பூங்கா

திருப்பத்தூரில் ரூ28½ லட்சத்தில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது.;

Update: 2022-12-23 18:32 GMT

திருப்பத்தூர் நகராட்சி 24-வது வார்டு அபாய்தெருவில் ரூ.28½ லட்சம் செலவில் புதிய சிறுவர் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிறுவர் பூங்கா அமைக்க பூமி பூஜை செய்து பணிகள் தொடக்க விழா அபாய் தெருவில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா தலைமை தாங்கினார். நகராட்சி கவுன்சிலர் சுதாகர் வரவேற்றார். புதிய சிறுவர் பூங்கா அமைக்க பூமி பூஜை போட்டு பணிகளை நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன் என்ற வெள்ளை ராஜா, பி.அசோகன், அபூபக்கர் முன்னாள் கவுன்சிலர் ஜானகிராமன் உள்்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்