ரூ.35 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா

ரூ.35 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா;

Update:2023-05-20 15:55 IST

முத்தூர்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சிறுவர் பூங்கா கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட துணை செயலாளர் ராசி. கே.ஆர்.முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர்

கே.சந்திரசேகரன், முத்தூர் பேரூர் செயலாளர் செண்பகம் பாலு, பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணைத் தலைவர்

மு.க.அப்பு, செயல் அலுவலர் வே.முருகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.நிர்வாகிகள், நகர, கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்