பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Update: 2023-09-25 16:48 GMT


உடுமலை அடுத்த முக்கோணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கா.உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செ.சரவணன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கத்தில் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாலியல் சிக்கல்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும், ஆபத்து நேரத்தில் 181 மற்றும் 1098 எண்களை தொடர்பு கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் எடுத்து உரைத்தார்.

மாணவ-மாணவிகள் புகையிலை பொருள்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அதன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்து உரைத்தார். அதைத்தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவிகள் கையில் ஏந்தி பெண் குழந்தைகள் பாதுகாப்பு எண்கள் குறித்தும் அவசரகால தொலைபேசி எண்களை கூறியும் முழக்கமிட்டனர்.

முடிவில் உதவி ஆசிரியை இந்திராதேவி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்