கூடலூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

கூடலூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

Update: 2023-02-16 18:45 GMT

கூடலூர்

கூடலூர் தோட்டத் தொழிலாளர் குழந்தைகள் தொழிற்பயிற்சி மையத்தில் குழந்தை திருமணத்தை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பொறுப்பாளர் ஷோபனா, ஒருங்கிணைந்த சேவை மையம் ஒருங்கிணைப்பாளர் ஹெலன், சரஸ் அறக்கட்டளை நிர்வாகி வசந்தகுமாரி மற்றும் சைல்ட் லைன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா பேசுகையில், குழந்தை திருமணம் நடைபெறுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் அதை தடுக்கும் வழிமுறைகளும் மற்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார். பின்னர் குழந்தை திருமணத்தை தடுப்போம் என அனைவரும் கையெழுத்திட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்