குழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு

திமிரியில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-10-18 18:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா வரவேற்றார். நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிய வந்தால் அதற்கு எதிரான நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி மொழி ஏற்றனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்