குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி
கோவில்பட்டியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடந்தது.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு யோகாசன சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. கழக ஆலோசகர் ராஜகோபால் தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்க நிர்வாகி ராஜன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதமன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி விஜயன்- ரம்யா தம்பதிகள் மகள் ரவீனா (வயது 9), மகன் சாய் விஷ்வா (6) ஆகியோர் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட தட்டுகளின் மேல் அமர்ந்து சாந்தி ஆசனம், பத்மாசனம் 20 நிமிடங்கள் செய்து சாதனை படைத்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார். நகரசபை தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பாராட்டினார். ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ்குமார் வாழ்த்தி பேசினார்.