பண்ருட்டியில்மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
பண்ருட்டியில் மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது குழந்தை படுகாயமடைந்தாா்.;
பண்ருட்டி,
பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 33). இவரது மனைவி குணா(28). இந்த தம்பதிக்கு நித்திஷ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. குழந்தை நித்திஷ், வீட்டின் முன்பு உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அதே ஊரை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தை நித்திஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நித்திசுக்கு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.