தலைமைச்செயலாளர் காணொலியில் கலந்தாய்வு
தலைமைச்செயலாளர் காணொலியில் கலந்தாய்வு செய்தார்.
சென்னையில் இருந்து தலைமைச்செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் கலந்தாய்வு மேற்கொண்டார். இதில் அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினார். இந்த காணொலி ஆய்வில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவுடன் அவர் மாவட்டத்தில் அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வு நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.