முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-09-04 16:36 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் கண்காணிப்பு பிரிவை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கண்காணிப்பு பிரிவு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் தர கண்காணிப்பு பிரிவினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதல்வர் உள்பட முதல்வரின் குறைதீர் துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்று ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய துறை உருவாக்கம்

பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு வரும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய துறை முதல்-அமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு துறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நிறைவேற்றக்கோரி, வரப்பெறும் மனுக்களில் ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்களின் தரம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது குறித்தும் சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடமிருந்து கருத்துக்கள் பெற்று மனுக்களுக்கான பதில்களின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட அளவிலான முதல்-அமைச்சரின் உதவி மைய மனுக்கள் தர கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்மணி உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்