முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்வு வார முகாம்

அரக்கோணத்தில் முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்வு வார முகாம் நடந்தது.

Update: 2022-12-20 19:17 GMT

முதல்-அமைச்சரின் முகவரித் துறை சிறப்பு குறை தீர்வு வாரம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. முகாமிற்கு அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறை தீர்வு வார முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 4 நபர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணையை அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா வழங்கினார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து தீர்வு காணப்படும் என தாசில்தார் தெரிவித்தார். அப்போது தலைமை இடத்து துணை தாசில்தார் சமரபுரி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்