முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு

கலவையில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வை 300 மாணவர்கள் எழுதினர்.

Update: 2023-10-07 19:35 GMT

திமிரி

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களின் திறனை கண்டறியும் வகையில் ஆண்டுதோறும் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ-மாணவிகளுக்கு இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது.

இதில் பென்னகர், மாம்பாக்கம், வாழைப்பந்தல் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 300 மாணவர்கள் தேர்வு எழுதினர். காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது.

தேர்விற்கு முன்னதாக மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்து அறிவுரைகள் மற்றும் தேர்வு எழுதும் முறை பற்றி முதன்மை கண்காணிப்பாளர் முருகேசன் எடுத்து கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்