சங்கரய்யாவுக்கு இன்று 101-வது பிறந்தநாள் - முதல்-அமைச்சர் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இன்று தன்னுடைய 101-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இன்று தன்னுடைய 101-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எளிமையின் சின்னமாக, இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம் வரும் என்.சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.
மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது வாழ்வு போராட்ட களமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சங்கரய்யாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
"பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர். சங்கரய்யாவுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்த அவர் இன்னும் பல்லாண்டு வாழ்க" என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.