வேளாண் பட்ஜெட்-க்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்...!

பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்';இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்' என கூறியுள்ளார்.;

Update:2023-03-22 20:24 IST

சென்னை ,

வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எம்.ஏர்.கே.பன்னீர் செல்வத்துக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து உழவன் பவுண்டேஷன் நிறுவனரும், நடிகருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கார்திக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அன்பின் கார்த்தி அவர்களே, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்!

உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்