பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி சென்றடைந்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி சென்றடைந்தார்.;

Update:2022-12-08 07:59 IST

தென்காசி,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தென்காசி மாவட்டத்திலும், நாளை மதுரை மாவட்டத்திலும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி புறப்பட்டார். முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதற்கு பின்னர் அவர் ரெயிலில் செல்வது இதுதான் முதல் முறையாகும்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தென்காசி சென்றடைந்தார். ரெயில் நிலையத்தில் அவருக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்