ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
சென்னை,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மதுரை, தேனியில் கட்டப்பட்டுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், நாகப்பட்டினம், தருமபுரியில் கட்டப்பட்டுள்ள கல்லூரி விடுதிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாரு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்
இதுபோன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, மதுரை, திருவாரூர், தென்காசி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்று அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.