தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.;

Update: 2023-06-09 03:53 GMT

தஞ்சை,

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சுமார் 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்தார். அப்போது அவருக்கு அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் இன்று காலை தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, விண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யவுள்ளார். முன்னதாக தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டெல்டா மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்-அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்