ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு இன்று (ஜூன் 19) 53-வது பிறந்த நாள். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித்தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "என்அன்பு சகோதரர் ராகுல்காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நமக்கு நீண்ட பயணம் உள்ளது. ஒன்றாக அணிவகுப்போம்" என்று அதில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.