கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் நடைபெற்று வரும் பணியினை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிட கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முன்னதாக மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.