ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடி ஏற்றினார்
ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடி ஏற்றினார்;
ராணிப்பேட்டை பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக நேற்று வேலூரில் இருந்து வந்த மு.க.ஸ்டாலின் பூட்டுத்தாக்கு அருகே கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் இரவு ராணிப்பேட்டைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வந்தார். அப்போது லேசான மழைத்தூறல் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் காரில் இருந்து இறங்கி வந்து ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகில் தி.மு.க. கொடியை அவர் ஏற்றி வைத்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள்.
நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான காந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக. மாநில சுற்றுச்சூழல்அணி துணைசெயலாளர் வினோத்காந்தி, ராணிப்பேட்டை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், தி.மு.க. நகர பொறுப்பாளர் பூங்கவனம், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத், குமார், கிருஷ்ணன், அப்துல்லா, மற்றும் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.