டபிள்யூ.பி.எப்.ஜி போட்டி: பதக்கங்கள் வென்ற காவலர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
டபிள்யூ.பி.எப்.ஜி போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள காவலர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
நெதர்லாந்தின் ராட்டர்டேமில் நடைபெற்று வரும் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ள காவலர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நெதர்லாந்தின் ராட்டர்டேமில் நடைபெற்று வரும் #WPFG2022-இல் பதக்கங்களை வென்று, உலக அரங்கில் தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ள காவலர்கள் சந்துரு, மயில்வாகனன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நெஞ்சாரப் பாராட்டி மகிழ்கிறேன்!" என்று கூறியுள்ளார்.