10 மையங்களில் முதல்-அமைச்சர் திறனாய்வு தேர்வு

தேனி மாவட்டத்தில் 10 மையங்களில் நடந்த முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வை 2,007 மாணவ, மாணவிகள் எழுதினர்.

Update: 2023-10-08 00:00 GMT

திறனாய்வு தேர்வு

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-24-ம் கல்வியாண்டு முதல் பள்ளிக்கல்வித்துறை மூலம் முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அரசு பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-2 முதல் கல்லூரி படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

172 பேர் எழுதவில்லை

அதன்படி முதல்-அமைச்சரின் திறனாய்வு தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 179 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத அனுமதி பெற்றிருந்தனர். மாவட்டத்தில் 10 மையங்களில் தேர்வு நடந்தது.

மாவட்டத்தில் 2,007 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அனுமதி பெற்றவர்களில் 172 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடந்த மையங்களில் தேர்வர்கள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் தவிர மற்ற நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் பத்திரிகையாளர்கள் தேர்வு நடப்பது குறித்த புகைப்படம் எடுக்கவும் கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்