அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிதம்பரம் போலீசார் சம்மன்

அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2023-07-02 06:56 GMT

சிதம்பரம்,

தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசனை விமர்சித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த டுவிட் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்த எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று அவர் வெளியே வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் தகவலை தனது சமூக வலைதளத்தில் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீட்சிதர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக போலி செய்தியை பரப்பி சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் வந்ததையடுத்து போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த கவுசிக் சுப்ரமணியன் என்பவருக்கு சிதம்பரம் போலீசார் சம்மன் அளித்துள்ள நிலையில், பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு சம்மன் அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்