சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் விழுப்புரம் சரக டிஐஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Update: 2022-05-19 12:10 GMT

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை (சிற்றம்பல மேடை) மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ஆம் தேதி அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த சூழலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், தீட்சிதர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் விழுப்புரம் சரக டிஐஜி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி வழிபட காவல்துறை பாதுகாப்புடன் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்