சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ள நிலையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2022-06-06 03:12 GMT

சிதம்பரம்:

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். பின்னர் அரசு உத்தரவின்பேரில் அந்ததடை நீக்கப்பட்டு, தற்போது கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலை சட்ட விதிகளின் படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை நியமித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை குழு உறுப்பினர்கள் வருகிற 7, 8-ந்தேதிகளில் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளனர். மேற்கண்ட ஆய்வுக்காக போதிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதற்கு பொது தீட்சிதர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். குறிப்பாக எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்வாகம் தொடர்பான தகவல்களை கேட்கக்கூடாது, இது உச்சநீதிமன்றத்திற்க்கு எதிரானது என இந்து சமய அறநிலையத்துறக்கு நோட்டீஸ் ஒன்றை பொது தீட்சிதர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்