சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம்

தண்ணீர் இல்லை என்று நோயாளிகள் வேதனையுடன் புகார் தொிவித்ததாகவும். இதை சாிசெய்யாவிட்டால் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளாா்.

Update: 2022-10-03 18:45 GMT

புவனகிரி:

சிதம்பரம் காமராஜர் அரசு ஆஸ்பத்திரியில் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், அவசர சிகிச்சை பிரிவு, தாய், சேய் அவசர சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரம் காமராஜர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வசதி, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆய்வு செய்தேன். அப்போது நோயாளிகள், போதுமான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை என்று வேதனையோடு தெரிவித்தனர். இதனை உடனடியாக சரிசெய்யாவிட்டால் அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி காமராஜர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ்.அருள், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை ஏ.வி.சி.கோபி, குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், வக்கீல் வேணு.புவனேஸ்வரன், பரங்கிப்பேட்டை கூட்டுறவு சங்க தலைவர் வசந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்