சிதம்பரம் நகரமன்ற கூட்டம்

சிதம்பரம் நகரமன்ற கூட்டம் நடந்தது.;

Update: 2023-09-21 18:45 GMT

சிதம்பரம்:

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வார்டில் உள்ள குறைகள் குறித்தும், நிவர்த்தி செய்வது குறித்தும் பேசினர்.

கூட்டத்தில் நகர மன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசுகையில், டெங்கு காய்ச்சல் குறித்து நகர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பதற்கு தனி நீதி ஒதுக்கீடு செய்வது, தெரு மின்விளக்கு இல்லாத பகுதிக்கு மின்விளக்கு அமைத்து கொடுப்பது, மழைநீர் வடிகாலை உயர்த்தி அமைப்பது, சாலைகளை சீரமைப்பது, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், விஜயராகவன், ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், தில்லை ஆர்.மக்கீன், சி.க.ராஜன், ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், ஏ.ஆர்.சி.மணிகண்டன், அசோகன், தாரணி அசோக், லதா, கல்பனா, தஸ்சீமா, சித்ரா மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்